இந்த மலையாள - பார்ப்பன அதிகார மய்யம் உருவானது எப்படி?
Posted by
அதி அசுரன்
at
0
comments
Labels: தமிழ்தேசியம், தேசியஇனம், பெரியார் திராவிடர் கழகம், முல்லைப்பெரியாறு
ஆணும் ஆணும் கூடினால் அய்யப்பன் வருவானா? எய்ட்ஸ் வருமா?
Posted by
அதி அசுரன்
at
0
comments
Labels: அய்யப்பன், இந்து மதம், ஐயப்பன், கேரளா, முல்லைப்பெரியாறு
மீடியாவுக்கு பயமில்லை : மார்கண்டேய கட்ஜு
கரன் தாப்பர்: சமீபத்தில் சில பத்திரிகை மற்றும் டீவி ஆசிரியர்களை சந்தித்தபோது, ‘மீடியா பொறுப்பில்லாமல் செயல்படுகிறது‘ என்று வருத்தப்பட்டீர்கள். மீடியாவின் செயல்பாடு உங்களுக்கு ஏமாற்றம் தருகிறதா?
மார்கண்டேய கட்ஜு: ரொம்ப ஏமாற்றம் அளிக்கிறது.
உங்களுக்கு மீடியா பற்றி நல்ல அபிப்பிராயம் இல்லையா?
நிச்சயமாக இல்லை.
உண்மையாகவா சொல்கிறீர்கள்?
உண்மையாகவே எனக்கு மீடியா பற்றி நல்ல அபிப்பிராயம் இல்லை. மக்கள் நலனுக்காக மீடியா பணியாற்ற வேண்டும். ஆனால் அவர்கள் அப்படி இல்லை. சில நேரங்களில் மக்கள் நலனுக்கு எதிராக செயல்படுவதையும் பார்க்கிறேன்.
உண்மையான தகவல்களை பாரபட்சம் இல்லாத முறையில் வழங்குவது மீடியாவின் கடமை என்று அந்த சந்திப்பில் குறிப்பிட்டீர்கள். மீடியா நேர்மையாக செயல்படவில்லையா, அல்லது அது போதுமானதாக இல்லையா?
ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். இந்தியாவின் வரலாற்றில் ஒரு மாற்றம் நேர்ந்து கொண்டிருக்கிறது. நில பிரபுத்துவ வேளாண் சமூகமாக இருந்த இந்தியா இன்றைக்கு நவீன தொழில்சார் சமுதாயமாக மாறும் காலகட்டத்தில் நாம் வாழ்கிறோம். இது வலிகள் மிகுந்த காலகட்டம். முன்பு ஐரோப்பா இதே மாற்றத்தை சந்தித்த நேரத்தில், மக்களுக்கு அந்த வலியை குறைக்கும் வகையில் அங்குள்ள மீடியா செயல்பட்டது.
இந்தியாவில் அப்படி நடக்கவில்லை என்கிறீர்களா?
இங்கே அதற்கு தலைகீழாக நடக்கிறது. ஐரோப்பாவில் ரூசோ, தாமஸ் பய்ன், திதரோ மாதிரி எழுத்தாளர்கள் மக்களை மாற்றத்துக்கு தயார் செய்தார்கள். ‘இந்த நாட்டிலுள்ள கடைசி சாமியாரின் குடலை உருவி அதை கடைசி மன்னனின் கழுத்தில் சுருக்கிட்டு தொங்கவிடும் வரையில் மக்களுக்கு சுதந்திரம் கிடைக்காது‘ என்று முழங்கினான் பிரஞ்சு சிந்தனையாளன் திதரோ.
அவர்களோடு ஒப்பிட்டால் இந்தியாவின் வரலாற்று மாற்றத்துக்கு நமது மீடியாவின் பங்களிப்பு எப்படி?
இந்திய மீடியா பெரும்பாலான நேரங்களில் மக்களுக்கு எதிரான நிலை எடுப்பதை பார்க்கிறேன். மூன்று விஷயங்களை உதாரணம் காட்டலாம். முதலாவது, பற்றி எரியும் உண்மையான பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தை மீடியா திசை திருப்புகிறது. இங்கே பிரச்னைகள் எல்லாமே பொருளாதார அடிப்படையிலானவை. நம் மக்களில் இன்னமும் 80 சதவீதம் பேர் வறுமை, வேலையின்மை, விலைவாசி, நோய்களால் பாதிக்கப்பட்டு வாழ்க்கை நடத்துகின்றனர். அந்த பிரச்னைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்து தீர்வு காண தூண்டாமல், பிரச்னைகளில் இருந்து திசை திருப்புகிறது மீடியா. சினிமா நட்சத்திரங்கள், அழகி போட்டி, கிரிக்கெட் மாதிரியான சமாசாரங்களை பெரிதுபடுத்தி நாட்டுக்கு அத்தியாவசியமானது அந்த விஷயங்கள்தான் என்பதுபோல் ஒரு பிரமையை உண்டாக்குகிறது.
ஃபேஷன், சினிமா, கிரிக்கெட் மேட்டரை மக்களுக்கு போதையேற்ற மீடியா பயன்படுத்துகிறது என்கிறீர்கள்?
ஆமாம். கிரிக்கெட் நமது ஜனங்களுக்கு ஒரு போதை பொருள் & ஓப்பியம் & மாதிரி. ரோமாபுரி பேரரசன் சொல்வானாம், ‘மக்களுக்கு ரொட்டி கொடுக்க வழியில்லை என்றால் சர்க்கஸ் பார்க்க ஏற்பாடு செய்‘ என்று. இந்தியாவில் மக்களுக்கு தேவையானதை கொடுக்க முடியாவிட்டால் அவர்களை கிரிக்கெட் பார்க்க வைக்கிறோம். நிறைய சேனல்களில் இரவு பகல் எந்த நேரமும் ஏதாவது கிரிக்கெட் மேட்ச் ஓடிக் கொண்டே இருக்கிறது & அதுதான் நாட்டின் ஒரே பிரச்னை மாதிரி.
மக்கள் விரோதமாக மீடியா செயல்படுவதை காட்டும் இன்னும் இரண்டு விஷயங்கள் என்னென்ன?
இரண்டாவது, அநேக நேரங்களில் மக்களை பிளவுபடுத்துகிறது மீடியா. இங்கே பலதரப்பட்ட மக்கள் வாழ்கிறார்கள். ஒருவரை ஒருவர் மதித்தால்தான் ஒற்றுமையாக நிம்மதியாக வாழ முடியும். ஆனால் என்ன நட க்கிறது? ஒரு ஊரில் குண்டு வெடித்தால் போதும். அடுத்த ஒரு மணி நேரத்துக்குள் ‘குண்டு வைத்தது நாங்கள்தான் என்று இந்தியன் முஜாஹிதின் கூறுகிறது‘ அல்லது ‘ஜய்ஷ் இ முகமத் அல்லது ஹர்கத் உல் ஜிஹாத் அமைப்பு கூறுகிறது‘ என்று ஏதோ ஒரு முஸ்லிம் பெயரை சேனல்கள் சொல்கின்றன. அதற்குள் எப்படி தெரியும் என்றால் எஸ்எம்எஸ் வந்தது, இமெயில் வந்தது என்று காட்டுகிறார்கள். எஸ்எம்எஸ், இமெயில் எல்லாம் யார் வேண்டுமானாலும் யார் பெயரிலும் அனுப்ப முடியும். யாரோ ஒரு விஷமி அனுப்பியிருக்கலாம். அதை பெரிதாக டீவியில் காட்டி மறுநாள் பத்திரிகைகளிலும் பிரசுரிக்கும்போது என்ன ஆகிறது? முஸ்லிம்கள் எல்லாரும் குண்டு வைப்பவர்கள், தீவிரவாதிகள் என்று ஒரு மதத்தையே ஒட்டுமொத்த அசுரர்கள் மாதிரி சித்தரிக்கிறது மீடியா. எந்த மதமாக இருந்தாலும் 99 சதவீதம் பேர் நல்லவர்கள் என்பதுதான் உண்மை.
மீடியா இந்த விஷயத்தில் கேர்லசாக நடக்கிறது, தகவல் உண்மையா என்பதை செக் பண்ணாமல் செய்தி வெளியிடுகிறது என்கிறீர்களா அல்லது வேண்டுமென்றே அப்படி செய்வதாக நினைக்கிறீர்களா?
மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த மீடியா வேண்டுமென்றே இவ்வாறு நடப்பதாக நினைக்கிறேன். நிச்சயமாக இது நாட்டு நலனுக்கு எதிரானது.
மீடியா வேண்டுமென்றே மக்களுக்குள் பிளவை உண்டாக்குவதாகவா சொல்கிறீர்கள்?
குண்டு வெடித்த சிறிது நேரத்தில் எஸ்எம்எஸ் வந்தது இமெயில் வந்தது என்பதை சாக்கிட்டு ஒரு மதத்தையே வில்லனாக மீடியா சித்தரிக்கும்போது அதற்கு வேறென்ன அர்த்தம் கொடுக்க முடியும்?
மீடியாவின் மக்கள் விரோத நிலைப்பாடுக்கு மூன்றாவது உதாரணமாக எதை சொல்ல போகிறீர்கள்?
ஒரு ஃபியூடல் சொசைட்டி மாடர்ன் சொசைட்டியாக மாறுகிற காலகட்டத்தில் அந்த மக்களும் நாடும் முன்னேற்ற பாதையில் செல்வதற்கு அறிவியல் சிந்தனை பரவ வேண்டும். அதற்கு மீடியா உதவ வேண்டும். ஐரோப்பாவில் நடந்ததை சொன்னேன். இங்கே என்ன நடக்கிறது? அறிவியல் சிந்தனையை தூண்டுவதற்கு பதில் ஜோசியம், மூடநம்பிக்கை போன்ற அறிவியலுக்கு எதிரான விஷயங்களை பரப்புகிறது மீடியா. ஏற்கனவே நமது நாட்டில் 80 சதவீத மக்கள் ஜாதி, மதம், மூடநம்பிக்கை போன்ற விஷயங்களில் சிக்கி மனரீதியாக பின்தங்கி நிற்கிறார்கள். அவர்களை அந்த மாயைகளில் இருந்து விடுவித்து ஒரு மேம்பட்ட சிந்தனை வட்டத்துக்கு கொண்டுவர, முற்போக்கான எண்ணங்கள் உருவாக மீடியா தூண்டுதலாக இருக்க வேண்டுமா, வேண்டாமா? ஆனால் மக்களை இன்னும் மடையர்களாக்கும் வேலையை நமது மீடியா செய்கிறது. பல சேனல்களில் பெரும்பாலான நேரம் ஜோசியம் ஓடுகிறது. இன்றைக்கு நீங்கள் இந்த கல் மோதிரம் போட வேண்டும், இன்ன கலர் சட்டை அணிந்தால் நீங்கள் இறங்கும் காரியம் வெற்றி என்றெல்லாம் அபத்தமாக சொல்லி மக்களின் மூளையை மழுங்கடிக்கிறார்கள். என்ன பேத்தல் இது!
நன்றி - தினகரன் நாளிதழ் 02.11.2011
Posted by
அதி அசுரன்
at
0
comments
Labels: ஜாதகம், ஜாதி, ஜோசியம், பத்திரிக்கை சுதந்திரம், மார்க்கண்டேய கட்ஜு, மீடியா
நாம் தமிழர் கட்சி, சமுதாயத்தைப் பின்னோக்கி இழுக்க வேண்டாம்!
நாம் தமிழர் கட்சியின் கலை இலக்கியப் பண்பாட்டுப்பாசறையின் சார்பாக இன்று ஒரு அறிவிப்பை கண்டோம். தமிழர் எழுச்சி வாரம் என்று ஒரு வாரத்தை நாம் தமிழர் கட்சி கொண்டாடுகிறது. அதன் திருவாரூர் மாவட்டத்தின் சார்பில் “பெண்களுக்கிடையேயான கோலப்போட்டி” நடத்தப்போவதாகவும், அதில் வெற்றி பெறுவோர்க்கு கீழ்வேளூரில் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் தோழர் சீமான் அவர்கள் பரிசினை வழங்க உள்ளதாகவும் விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது.
50 ஆண்டுகளுக்கு முன்பே க்ராப் வெட்டிக்கொள்ளும் பெண்களுக்கு பரிசு அறிவித்தவர் பெரியார். 25 ஆண்டுகளுக்கு முன்பே பெண்களுக்கான சைக்கிள்போட்டி நடத்தியது திராவிடர் கழகம். கேப்டன் மாலதி படையணி, மேஜர் சோதியா படையணி என்று பெண்களுக்கான படைப்பிரிவுகளை உருவாக்கி ஆண்களுக்கு நிகராக எதிரிளோடு களமாடச் செய்தவர் தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரன். ஆனால் தமிழ்தேசியத்தை இலக்காகக் கொண்டுள்ளதாக அறியப்படும் நாம் தமிழர் அமைப்பின் கலை இலக்கியப் பண்பாட்டுப்பாசறை இப்படி ஒரு கோலப் போட்டியை நடத்துகிறது. தமிழ்தேசியர்கள் விரும்பும் பண்பாடு, பெண்ணடிமைக்கு காவல் அரணான இந்துத்துவப் பண்பாடுதானா? திராவிடர் இயக்கம் இந்துத்துவப் பண்பாடுகளுக்கு எதிராக, பெண்விடுதலைத் தளத்தில் ஆற்றிய பணிகளை அறியாமல் திராவிடத்தால்தான் தமிழினம் கெட்டது என்று எந்த வரலாறையும் தெரிந்துகொள்ளாமல் பேசிக்கொண்டிருக்கும் எந்த இயக்கமும் சாராத நண்பர்களுக்கும், கோலப்போட்டியை நடத்தஉள்ள நாம் தமிழர் கட்சி தோழர்களுக்கும் சில வரலாற்றுத் தகவல்களைத் தெரிவிக்க விரும்புகிறேன். பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்ட ‘பெரியாரின் விடுதலைப்பெண்’ என்ற நூலில் இருந்து சில பக்கங்கள்...
சுயமரியாதை இயக்க மாநாடுகள் - போராட்டங்களில் பெண்களுக்கு முன்னுரிமை
சுயமரியாதை இயக்கத்தின் முக்கிய அம்சம் - அந்த இயக்கம் நடத்திய மாநாடுகளாகும். மாநில அளவிலும் - மாவட்ட அளவிலும் இத்தகைய மாநாடுகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்துள்ளன. கொள்கை முழக்கங்களோடு ஊர்வலம் - சுயமரியாதை இயக்கத்தின் கொள்கைகளை விளக்கிடும் நீண்ட பேருரைகள் - பல்வேறு அரசியல், சமூக நிகழ்வுகள் குறித்த விரிவான தீர்மானங்கள் ஆகியவை இந்த மாநாடுகளின் தனிச்சிறப்புகள் பெண்களின் பிரச்சனைகளைத் தொடர்ந்து பிரச்சாரம் செய்யவும் பெண்களைப் பொதுவாழ்வில் பங்கெடுக்க ஊக்கப்படுத்தவும் இந்த மாநாடுகளை சுயமரியாதை இயக்கம் தொடர்ந்து பயன்படுத்தி வந்திருக்கிறது. முதல் சுயமரியாதை இயக்க மாநில மாநாடு 1929 இல் சென்னை அருகே செங்கல்பட்டில் நடந்தது. ( நூல் - நமது குறிக்கோள் ) மாநாட்டில் சைமன் கமிஷன், சாதிய ஒடுக்குமுறை, மத நிறுவனங்களின் சுரண்டல் பற்றி பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டதோடு, திருமணம் மற்றும் மதச்சடங்குகள் பற்றி விசேட கவனம் செலுத்தி இந்த மாநாடு பரிசீலித்தது. அது தொடர்பாக பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஆணூக்கும் பெண்ணூக்கும் சொத்தில் சம உரிமை வேண்டும் என்பது தீர்மானங்களில் ஒன்று.
இரண்டாவது சுயமரியாதை மாநாடு 1930 இல் ஈரோட்டில் நடந்தது. ( நூல் - நமதுகுறிக்கோள் ) அதே மாநாட்டு அரங்கில் இளைஞர்கள் மாநாடும் - பெண்கள் மாநாடும் தனித்தனியாக நடத்தப்பட்டன. பெண்கள் விடுதலைக்கு பெண்களே முன்வர வேண்டும் என்பது பெரியாரின் கொள்கை; அந்த அடிப்படையில் தான் பெண்களுக்கான தனி மாநாடு நடத்தப்பட்டது. பெண்கள் உரிமைக்காக - ஆண்கள் போராட வரமாட்டார்கள் என்பது பெரியாரின் உறுதியான கருத்து. ( தமிழர் தலைவர் . நூல் - சாமி.சிதம்பரனார் )
அந்த மாநாட்டை பெண்களே முழுமையாக முன்னின்று நடத்தினர். 16 வயது வரை பெண்களுக்கு கட்டாயக்கல்வி தர வேண்டும் ; `பால்ய விவாகத் ` தடுப்புச்சட்டத்தைத் தீவிரமாகவும், உடனடியாகவும் அமல்படுத்தவேண்டும்; பெண்களுக்கு ஆண்களைப் போல சம சொத்துரிமை வேண்டும்; பெண்களைக் கோயிலுக்குப் பொட்டுக்கட்டி விட்டு விபச்சாரிகளாக்கும் இழிவுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற தீர்மானங்கள் அதிலே நிறைவேற்றப்பட்டன. ( குடிஅரசு-1930 மே.18 ) பொதுமாநாட்டில் குறுக்கிடாமல் - இந்தப் பெண்கள் மாநாடு தனியாகவே நடத்தப்பட்டது; இளைஞர்கள் மாநாட்டிலும் பெண்ணூரிமைக்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இளைஞர்கள் - விதவைகளையும்இ தேவதாசிப்பெண்களையும் திருமணம் செய்ய முன்வர வேண்டும் என்று அந்த மாநாடு அறைகூவல் விடுத்தது. ( நமது குறிக்கோள்.நூல்)
சுயமரியாதை இயக்கத்தின் பெண் தொண்டர்களைக் கொண்டு தனியாகப் பெண்கள் மாநாடு நடத்தப்பட்டாலும் பொது மாநாட்டிலும் பெண்களின் பங்களிப்பு கணிசமாகவே இருந்தது. அதாவது பெண்கள் இயக்கத்தோடு மட்டும் பெண்களை முடக்கிவிட நினைக்கவில்லை. பல நேரங்களில் - மாநாட்டின் முக்கிய கவுரமாகக் கருதப்படும் - மாநாட்டுத் துவக்க உரையை நிகழ்த்தும் பொறுப்புக்களே - பெண்கள் மீது சுமத்தப்பட்டிருக்கின்றன. உதாரணத்திற்குச் சிலவற்றைக் குறிப்பிடுவோம்.
1. 1931 இல் விருதுநகரில் நடந்த மூன்றவது சுயமரியாதை மாநாட்டை துவக்கி வைத்தவர் இந்திராணி பாலசுப்பிரமணியம் ( குடிஅரசு .1931 ஆக.16 )
2. 1932 இல் நடந்த தஞ்சை மாவட்ட சுயமரியாதை மாநாட்டைதுவக்கி வைத்தவர் டி.எஸ்.குஞ்சிதம். ( குடிஅரசு 1932 ஜீன் 26 )
3. 1933 இல் தஞ்சை மாவட்ட மூன்றாவது சுயமரியாதை மாநாட்டை துவக்கி வைத்தவர் எஸ்.நீலாவதி.
4. 1934 இல் திருச்செங்கோடு தாலுகா ஆதி திராவிடர் மாநாட்டைத் துவக்கி வைத்தவர் ஆர்.அன்னபூரணி.
5. 1937 இல் திருநெல்வேலி மாவட்ட மூன்றாவது ஆதிதிராவிடர் மாநாட்டிற்குத் தலைமை வகித்தவர் மீனாம்பாள் சிவராஜ்.
6. 1938 இல் மதுரையில் நடந்த சுயமரியாதை மாநாட்டைத்துவக்கி வைத்தவர் இராஜம்மாள் .
இந்தப் பெண்கள் - தங்களின் துவக்க உரைகளில் பெண்ணூரிமை தொடர்பான பல்வேறு கருத்தோட்டங்களை முன் வைத்துப் பேசினர். பெண்களின் `மவுனக்` கலாச்சாரத்தைத் தகர்த்தெறிய பெரியார் மேற்கொண்ட முயற்சி இது; இந்த நடவடிக்கைகளால் - சுயமரியாதை இயக்கத்தின் பெண் தொண்டர்கள் உற்சாகமடைந்து - ஆர்வத்துடன் செயல்பட முன்வந்தனர். பேசவே தெரியாத பெண்ணாக இருந்தாலும் சில வார்த்தைகளாவது மாநாட்டு மேடையில் பேசவேண்டும் என்று பெரியார் வலியுறுத்தினார். ( தாராசுரத்தில் இராஜம்மாள் அளித்த பேட்டி 1988 நவம்பர் 21 )
பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி - பெண்களைப் பொதுவாழ்வில் இறக்கிடும் நோக்கத்தோடு சுயமரியாதை இயக்கம் நடத்திய மாநாடுகளின் வெற்றி பற்றி சிங்காரவேலர் இவ்வாறு எழுதினார்.
`` சமையலறைக்குள்ளே மட்டும் முடக்கப்பட்ட பெண்கள் இன்று மேடையேறிப் பேசுகிறார்கள். பொதுமக்கள் பிரச்சனை பற்றி விவாதிக்கிறார்கள் ; ஆண்களோடு சரிநிகர் சமமாக நின்று சமூகத் தொண்டாற்றுகிறார்கள். இதற்கான பெருமைகள் எல்லாம் பெரியாருக்குத் தான் சேரும் ! இந்த இயக்கத்தில் இருப்பது போல் பேச்சாற்றல் மிக்க பெண்களை வேறு இயக்கங்களில்பார்ப்பதுமிகவும் அபூர்வம். கடந்த 50 ஆண்டுகளில் இந்திய தேசியக் காங்கிரஸ் ஒரு சரோஜினி நாயுடுவைத் தான் உருவாக்க முடிந்தது.
... சுயமரியாதை இயக்கத்தைச் சார்ந்த பெண்களுக்குத் தான் எத்தனை ஆற்றல். பெண்கள் மாநாட்டைத் தனியாகவும்இ உண்மை யான சமத்துவ உணர்வுடனும் அவர்களே நடத்துகிறார்கள். வேறு இயக்கங்களிலே ஆண்களின் நடவடிக்கைகளுக்குப் பின்னால்தான் பெண்கள் இருக்கிறார்கள். ஆனால் நம்முடைய இயக்கத்திலோ - பெண்கள் சுதந்திரமான குழுவாகச் செயல்படுகிறார்கள். ஆண்களுடன் சமத்துவத்தைக் காட்டி - இயக்கப்பணிகளில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்கிறார்கள்.``
( சீ.வி.கே.அமிர்தவல்லியார் - கோலாம்பூரில் - சிங்காரவேலரின் உரையை மேற்கோள் காட்டிப் பேசியது. குடிஅரசு.1940 அக்டோபர் 20 )
1938 இல் சென்னையில் நடந்த முற்போக்கு பெண்கள் சங்க மாநாட்டில் தான் பெரியாருக்கு `பெரியார்` என்ற பட்டத்தைப் பெண்கள் அளித்து கவுரவித்தனர். தென்னாட்டு மக்களின் சமூக சீர்திருத்தத்துக்கு உழைத்த ஈடு இணையற்ற தலைவர் பெரியார் என்று பாராட்டினர். இந்தப் பட்டமே அவர் வாழ்நாள் முழுவதும் அவரது மறைவுக்குப் பிறகும் அவருக்கு நிலைத்துவிட்டது.
சுயமரியாதை இயக்கத்தின் மாநில மாநாடுகளுக்காக அமைக்கப்பட்ட பல்வேறு கமிட்டிகளில் உறுப்பினர்களாக பெண்கள் தேர்வு செய்யப்பட்டனர். உதாரணமாக - 1931 இல் விருதுநகரில் நடந்த மூன்றாவது சுயமரியாதை மாநாட்டுக் கமிட்டி உறுப்பினராக இந்திராணி பாலசுப்பிரமணியம் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
1933 ஆம் ஆண்டு ஈரோட்டில் நடந்த சமதர்மக்கட்சி மாநாட்டு உறுப்பினராக எஸ்.நீலாவதி,கே.குஞ்சிதம் ஆகியோர் பிரச்சாரக் கமிட்டி உறுப்பினர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கிராமங்களில் சுயமரியாதை லீக் குகளை அமைப்பது இவர்களின் பணி . ஆர்.அன்ன பூரணி, இராமாமிர்தம் அம்மாள் போன்றவர்கள் சமதர்மக்கொள்கைப் பிரச்சாரகர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
சுயமரியாதை இயக்கத்தைச் சார்ந்த பெண்கள் - இப்படி மாநாடு பிரச்சாரப் பணிகளில் ஈடுபடுவதோடு இல்லாமல் போராட்டங்களிலும் தீவிரமாகப் பங்கெடுத்தனர். நாம் ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட காலகட்டத்தில் மிகவும் குறிப்பிடத்தகுந்தது இந்தி எதிர்ப்புப் போராட்டமாகும். 1937 ஆம் ஆண்டு இறுதியில் துவங்கி 1940 துவக்கம் வரை - சுமார் இரண்டாண்டு காலம் இந்தப்போராட்டம் நடந்தது. இந்தியைத் தமிழ்நாட்டுப்பள்ளிகளில் கட்டாயப்பாடமாக்கி - அன்றைய காங்கிரஸ் அமைச்சரவையின் முதல்வர் சி.இராஜ கோபாலச்சாரி உத்தரவு பிறப்பித்திருந்தார்; இந்தப்போராட்டம் தான் சி.இராஜகோபாலாச்சாரியின் உத்தரவைப் பின்வாங்கச்செய்தது.
போராட்டத்தின் துவக்கக் கட்டத்தில் - சுயமரியாதை இயக்கத்தின் பெண் தொண்டர்கள் ஊர்வலங்களிலும் கூட்டங்களிலும் பங்கெடுத்தார்கள். அந்தப் பெண்கள் தங்கள் சேலைகளில் `தமிழ்க்கொடி` யின் படத்தை அச்சிட்டுக்கொண்டு - இந்தி எதிர்ப்பு - தமிழ்வாழ்த்து முழக்கங்களை எழுப்பிக் கொண்டு வந்தது ஊர்வலத்தின் தனிச்சிறப்பு ( தமிழர் தலைவர் . நூல் )
இந்தி எதிர்ப்புக் கூட்டங்களிலும் பெண்கள் பேசினார்கள். உதாரணமாக சென்னை திருவல்லிக்கேணி 1938 செப்டம்பர் 11 ஆம் தேதி நடந்த இந்தி எதிர்ப்புப் படை வரவேற்புக் கூட்டத்தில் இராமாமிர்தம் அம்மையார், நாராயணி அம்மையார், வா.பா.தாமரைக்கண்ணி அம்மையார், முன்னாகர அழகியார் உட்பட பல பெண்கள் பேசினார்கள். இந்தியை எதிர்த்து - திருச்சியிலிருந்து புறப்பட்டு நடந்தே சென்னை வரைப் பிரச்சாரம் - செய்து வந்த இந்தி எதிர்ப்புப் படையை வரவேற்க - இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. போராட்டக் களம் நோக்கிச்சென்ற - தங்கள் இயக்கத்தின் ஆண் தோழர்களுக்கு வழி அனுப்பி விழாக்களையும் - பெண்களே ஏற்பாடு செய்து நடத்தினர்.
பின்னர் போராட்டம் தீவிரமானபோது, பெண்களே நேரடியாகப் பேராட்டக்களத்தில் குதித்துக் கைதானார்கள். பெண்களின் முதல் போராட்ட அணி 1938 நவம்பர் 14 ஆம்தேதி சென்னையில் கைதானது; அதில் டாக்டர்.தர்மாம்பாள், இராமாமிர்தம் அம்மையார்,பட்டம்மாள், சீதம்மாள் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். ( குடி அரசு 1938 நவம்பர் 30 )
பாரதி தாசனின் இந்தி எதிர்ப்புப் போர்ப்படைப்பாடலைப்பாடிக்கொண்டு, பெத்துநாயக்கன் பேட்டையில் உள்ள காசிவிசுவநாதன் கோயிலில் இருந்து இந்து தியாலாஜிக்கல் பள்ளி வரை - இந்தப் பெண்கள் அணி ஊர்வலமாகச் சென்றது. வழியில் பல இடங்களில் இந்தி எதிர்ப்பாளர்கள் அவர்களை வரவேற்று மாலைகள் அணிவித்தனர். பள்ளி முன் மறியலுக்குச் சென்ற அவர்களை போலீசார் தடுத்து நிறுத்திக்கைது செய்தனர். அவர்களுக்குநீதிபதி 6 வார சிறைத் தண்டனை விதித்தார் ; அபராதம் கட்டி விடுதலைஆகிறீர்களா ? அல்லது சிறைக்குப் போகிறீர்களா ? என்று நீதிபதி கேட்டபோது - அவர்கள் சிறைக்குப் போவதையே விரும்பி ஏற்றனர்.
அதுமுதல் - அவ்வப்போது பெண்கள் போராட்ட அணிகள் களத்தில் வந்து கொண்டே இருந்தது. 1934 செப்டம்பர் 5 இல் கடைசிப் பெண்கள் அணி கைதானது. மொத்தம் 73 பெண்கள் இந்தியை எதிர்த்து மறியல் களத்தில் இறங்கி கைது செய்யப்பட்டபிறகு, சிறையில் அடைக்கப்பட்டார்கள். இதிலே மிகவும் குறிப்பிடப்படவேண்டியது - பல பெண்கள் தங்கள் கைக்குழந்தைகளுடன் சிறை புகுந்ததாகும்.
மொத்தம் 32 குழந்தைகள், தங்கள் தாய்மார்களுடன் சிறையிலிருந்தனர். ( நூல் . தமிழன் தொடுத்த போர்.இளஞ்செழியன் ) போராட்டத்தைக் கண்டு நிலைகுலைந்து விரக்தி அடைந்த ஒரு காங்கிரஸ்அமைச்சர் இப்படிக் குழந்தைகளுடன் பெண்கள் சிறை புகுவதைக் கேலி பேசினார். தங்கள்குழந்தைகளுக்கு சிறையில் பால் கிடைக்கும் என்பதால்தான் இவர்கள் குழந்தைகளுடன் சிறைக்குப் போகிறார்கள் என்றார். சுயமரியாதை இயக்கப் பெண்கள் இந்தப் பேச்சைக் கேட்டுக் கொதிப்படைந்தனர். 1938 இல் வேலூரில் நடந்த சென்னை மாகாணப் பெண்கள் மாநாட்டில் - அமைச்சர் தனது கூற்றைத் திரும்பப் பெறுவதோடு நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது.( குடிஅரசு.1938 டிசம்பர் 28 )
சுயமரியாதை இயக்கத்தின் பத்திரிக்கையான குடிஅரசு பெண்கள் போராட்டத்தில் பங்கெடுத்த செய்திகளை மிகவும் முக்கியத்துவம் கொடுத்து வெளியிட்டது ; நீதிமன்றத்தில் இந்தப் பெண்கள் வாதிட்ட விவரங்களை முழுமையாக வெளியிட்டதோடு அவர்களின் புகைப்படங்களையும் வெளியிட்டது. இந்தப் போராட்டத்தில் பெரியார் கைது செய்யப்பட்டதற்குக் கூட - பெண்களைத் தூண்டிவிட்டு சிறைக்கு அனுப்பினார் என்றே குற்றம் சாட்டப்பட்டது. நீதிமன்றத்தில் அரசு வழக்கறிஞருக்கும் - ஒரு பெண்ணூக்கும் நடந்த உரையாடலைக் கீழே தருகிறோம்.
அரசு வழக்கறிஞர் : நீங்கள் கைகுழந்தைகளுடன் இருக்கிறீர்களே ; சிறையிலே இருப்பது மிகவும் அவதியானது ;உங்கள் கணவரும் இதனால் பாதிக்கப்படுவார் நன்றாக யோசியுங்கள் ; இனிமேல் - இப்படி எதிர்காலத்தில்செய்யமாட்டேன் என்று கூறிவிட்டால் நாங்கள் மன்னித்து விடுகிறோம்.
கைதான பெண் : எங்கள் மொழியின் வளர்ச்சிக்கும், நாட்டின் உயர்வுக்கும் எந்த சங்கடத்தையும் நாங்கள் தாங்கிக் கொள்ளத் தயாராக இருக்கிறோம். இதிலே தலையிடுவதற்கு எங்கள் கணவர்களுக்கு எந்த உரிமையும் கிடையாது.அதற்காக அவர்கள் கவலைப்படுபவர்களும் அல்ல ( குடிஅரசு 1938 நவம்பர் 25 )
நன்றி: ச.ஆனந்தியின் ‘பெண்ணுரிமையும் பெரியாரும்’ என்ற நூல்
வாசலில் சாணி தெளிப்பது, கோலம் போடுவது, வீட்டைக் கூட்டிப் பெருக்குவது, சமையல் செய்வது, திருமணம் செய்வது, நாய்க்கு லைசன்ஸ் கட்டுவதைப் போல தாலியைத் தூக்கிக்கொண்டு திரிவது, பின்தூங்கி முன் எழுவது, கூட்டுக்குடும்பத்தைப் பேணிக்காப்பது, பிள்ளை பெறுவது, அவர்களை வளர்ப்பது, பிறகு அடுத்த தலைமுறையையும் வளர்த்தெடுப்பது என்பது போன்ற சங்கிலித் தொடர் வேலைகளில் இருந்து பெண்கள் இப்போது தான் மெல்ல மெல்ல வெளியேறத் தொடங்குகிறார்கள். அதுபற்றி சிந்திக்கிறார்கள். விவாதிக்கிறார்கள். இந்தச் சூழலில் ஒரு இப்படி ஒரு திராவிடர் பண்பாட்டை வளர்க்கும் செயல்களைத் திட்டமிட்டால் நல்லது. வேண்டுமானால் இவற்றை தமிழ்ப்பண்பாடு என்றுகூட சொல்லிக்கொள்ளுங்கள்.
இவ்வாறு இந்துமதம் அந்தக்காலக்கட்டத்தில் பெண்களுக்கென ஒதுக்கிவைத்திருந்து இடத்திலிருந்து பெண்களை அகற்றி, ஒரு வளர்ச்சிச் நோக்கிய பாதையில் பயணிக்கச்செய்தவர் பெரியார். இந்துப்பண்பாடு பெண்களுக்கு என்று விதித்திருந்த அனைத்துக் கடமைகளில் இருந்தும் பெண்களை விடுவிக்கப் போராடியது திராவிடர் இயக்கம். இப்படிப்பட்ட சமுதாயப் புரட்சி இயக்கத்தின் தலைவரான பெரியாரையும், மாபெரும் விடுதலை இயக்கத் தலைவரான பிரபாகரனையும் தமது வழிகாட்டிகளாகச் சொல்லிக்கொள்ளும் நாம் தமிழர் கட்சியினர் கோலப்போட்டிகளை நிறுத்த வேண்டும். தோழர் கொளத்தூர் மணி, தோழர் சீமான், தோழர் பண்ருட்டி வேல்முருகன் ஆகியோர் பொறுப்பாளர்களாக உள்ள உதைக்குத்துக் கழகத்தின் மேற்பார்வையில் பெண்களுக்கிடையேயான கிக் பாக்ஸிங் உதைக்குத்துப்போட்டிகளை நடத்துவதே தற்காலத் தேவை. இல்லை இல்லை கோலம் என்பது தமிழர் கலை என்கிறீர்களா? பரவாயில்லை அந்தக் கோலப்போட்டியை ஆண்களுக்கு நடத்துங்கள். ஆண்களுக்கிடையேயான சமையல் போட்டியை நடத்துங்கள். சமுதாயத்தைப் பின்னோக்கி இழுக்க வேண்டாம்.
Posted by
அதி அசுரன்
at
7
comments
Labels: periyardk, கொளத்தூர் மணி, சீமான், திராவிடம், நாம் தமிழர், பெரியார் திராவிடர் கழகம்
திராவிடர்களுக்கு எதிரான 7 ஆம் அறிவு
“பழந்தமிழன் யார்? அவன் கொள்கை என்ன? அதற்கு ஆதாரம் என்ன? அதற்கு இன்று அவசியம் என்ன? - என்பது போன்ற கேள்விக்குப் பதில் சொல்ல இன்று ஆளைக் காணோம். வீணாக, அந்தப் பேரில் பிழைக்கவோ, பெருமைப்படவோ, மக்களைச் சுரண்டவோ தங்கள் எண்ணத்திற்கு பயன்படுத்திக் கொள்ளவோ பயன்படுத்தப்படுகிறது” என்றார் பெரியார். அப்படி பழந்தமிழர் பெருமை என்று ஒன்றைச் சொல்லி மக்களைச்சுரண்டும் முயற்சியே 7 ஆம் அறிவு.
Posted by
அதி அசுரன்
at
19
comments
Labels: 7 ஆம் அறிவு, a.r.murugadas, எ.ஆர்.முருகதாஸ், தமிழர் பெருமை, பெரியார் தி.க, போதி தருமர்
