“பழந்தமிழன் யார்? அவன் கொள்கை என்ன? அதற்கு ஆதாரம் என்ன? அதற்கு இன்று அவசியம் என்ன? - என்பது போன்ற கேள்விக்குப் பதில் சொல்ல இன்று ஆளைக் காணோம். வீணாக, அந்தப் பேரில் பிழைக்கவோ, பெருமைப்படவோ, மக்களைச் சுரண்டவோ தங்கள் எண்ணத்திற்கு பயன்படுத்திக் கொள்ளவோ பயன்படுத்தப்படுகிறது” என்றார் பெரியார். அப்படி பழந்தமிழர் பெருமை என்று ஒன்றைச் சொல்லி மக்களைச்சுரண்டும் முயற்சியே 7 ஆம் அறிவு.
தமிழனின் பெருமையை உலகுக்குப் பறைசாற்றும் 7 ஆம் அறிவு என்று பத்திரிக்கை, தொலைக்காட்சிகளில் பிரம்மாண்டமான விளம்பரங்கள். சமூக வலைத்தளங்களில் பரபரப்பான விவாதங்கள். ‘நீங்கள் எவ்வளவு எதிர்பார்ப்போடு வந்தாலும் அதுக்கும் மேலே, அதுக்கும் மேலே தான் படம் இருக்கும்’ என்று ஏ.ஆர்.முருகதாசின் விளம்பரம். அறிவுப்பூர்வமாக சிந்தித்துச் செயல்படும் ஒரு பெண்ணை நம் கண்முன் காட்டிய எங்கேயும் எப்போதும் என்ற ஒரு இயல்பான படத்தைத் தயாரித்தவர் என்பதால் அது போன்ற ஒரு பாமரத்தனமான ஆசையுடன் 7 ஆம் அறிவுக்குச் சென்றோம்.
5 ஆம் நூற்றாண்டில் தென்னிந்தியாவில் இருந்து சீனா சென்ற போதிதர்மன் பற்றிய ஒரு கதை. தமிழர்களின் பெருமையை உலகிற்கு பறை சாற்றினான், சாலின் குங்ஃபூ கலையை உலகிற்கு அறிமுகப்படுத்தினான், தமிழ் மருத்துவத்திற்குப் பெருமை சேர்த்தான் என்றெல்லாம் ஏகப்பட்ட பில்ட் அப்கள். மிக முக்கியமான உண்மை என்னவென்றால் போதி தர்மன் தமிழனே இல்லை என்பதுதான்.
திரைப்படக்குழுவினர் சொல்லும் கதைப்படியான போதிதர்மன் சீனா சென்ற காலம் கி.பி. 520 அல்லது 525. அந்தக்காலக்கட்டத்தில் பல்லவ நாடு சுதந்திர நாடாக இயங்கி வந்தது. அதற்கு அருகாமை நாடுகளான சேர, சோழ, பாண்டிய நாடுகளை களப்பிரர்களும், பல்லவ நாட்டுக்கு வடக்கே இரேணாட்டு தெலுங்குச் சோழர்களும் அரசாண்டனர். போதி தர்மனின் இயற்பெயர் புத்தவர்மன். இவன் ஸ்கந்தவர்மன் என்ற பல்லவ அரசனுக்கு மூன்றாம் மகன் என்று சொல்லப்படுகிறது. அப்போதைய தமிழ் மன்னர்களின் பெயர்கள் நெடுஞ்செழியன், கரிகாலன், செங்குட்டுவன், இளந்திரையன் என்பது போல சுத்தத் தமிழ்ப்பெயர்களில்தான் இருந்தன. போதி என்ற வடமொழிச் சொல்லுக்கு அரச மரம் என்று பொருள். ஸ்கந்தவர்மன் என்றோ, போதி வர்மன் என்றோ, குமாரவிஷ்ணு, சிம்ம விஷ்ணு என்றோ வடமொழிப் பெயரை தமிழ் மன்னன் சூடிக்கொள்ள அப்போது வாய்ப்பில்லை. பல்லவர்கள் தமிழர்களே அல்ல வடக்கிலிருந்து வந்தவர்கள் என்பது தான் பல வரலாற்று அறிஞர்களின் ஆய்வுமுடிவு. பல்லவர்களின் மொழி ப்ராகிருதமும், சமஸ்கிருதமுமே. அவர்களின் செப்பேடுகளும் கல்வெட்டுக்களும் ப்ராகிருதத்திலேயே உள்ளன. அவர்களின் ஆட்சிமொழிகள் வடமொழிகளே.
சில வரலாற்றுக் குறிப்புகள் போதி தர்மன் ஒரு பார்ப்பன குறுநில மன்னனுக்குப் பிறந்தவன் என்றுதான் குறிப்பிடுகின்றன. கருஞ்சட்டைத் தமிழன் 23.04.10 இதழில் தோழர் எழில்.இளங்கோவன் அவர்கள்,
“முதன்முதலாக சாரிபுத்தனும், மவுத்கல்யாயனாரும் புத்தத்தில் சேர்ந்தார்கள். தொடர்ந்து பார்ப்பனர்கள் பவுத்தர்களாக மாறி புத்தருடன் சேர்ந்தார்கள். விளைவு...?
புத்தர் மறைந்தபின் கூடிய இரண்டாம் பவுத்தமகா சபையில் பவுத்தத்தை இரண்டாக உடைத்தார்கள் வஜ்ஜியர்கள் என்ற பார்ப்பன பவுத்தத் துறவிகள். படிப்படியாகப் புத்தரின் சமூகச் சிந்தனை, பகுத்தறிவு, சுய சிந்தனைக் கொள்கைகள், கடவுள் மறுப்பு, பூசை, சடங்குகள் புறக்கணிப்பு போன்ற அனைத்தும் மாற்றப்பட்டன. புத்தரையே கடவுள் ஆக்கினார்கள். புத்தரின் சமூக எழுச்சிக்கான போர்க்குணத்தை மறைத்து, ஒழுக்கமாக இருப்பவனே பவுத்தன் என்று சீல உபதேசங்களை நுழைத்து விட்டார்கள்.
பின்வந்த காலங்களில் சங்கமித்திரர், ஆச்சாரிய புத்ததத்தர், கணதாசர், வேணுதாசர், போதி தருமர், தருமபாலர், ஆச்சாரிய திக்நாகர், ஆச்சாரிய தருமபாலர், தம்மபாலர் போன்ற பலப்பல பார்ப்பனர்கள் பவுத்தத் துறவிகளாக மாறி, புத்தரின் நேரடி பவுத்தத்தை மாற்றி அமைத்தார்கள். கி.பி.2 ஆம் நூற்றாண்டில் நாகார்ஜுனர் என்பவர், புத்தருக்கு நேர் எதிரான ஆரியவாதத்தைச் சூனியவாதமாகச் சொல்லி மகாயான பவுத்தம் என்றார். பவுத்தம் வீழ்ந்தது”
இவ்வாறு தோழர் எழில் இளங்கோவன் சொல்வது மட்டுமல்ல. கேரளாவில் களரிப்பட்டு அல்லது களரிப் பாயாட்டு என்ற கலையை பயிற்றுவிக்கும் பல பயிற்சி மையங்கள் உள்ளன. அவற்றின் விளம்பரங்களில் களரிப்பாயாட்டுக் கலையை உருவாக்கிய போதி தர்மன் ஒரு மலையாளி என்றும் (அப்போது சேர நாடு) ஒரு பார்ப்பன மன்னனுக்கு மூன்றாவதாகப் பிறந்தவர் என்றும் குறிப்பிட்டுள்ளனர். ஆதாரம்: http://maruthikalari.org/english/kalari.htm
இந்தத் தளம் மட்டுமல்ல திரைப்படக்குழுவினர் சொன்னபடி தேடினால் போதி தர்மன் ஒரு தமிழன் அல்ல. ஒரு சேர நாட்டுப்பார்ப்பான் அல்லது வடநாட்டுப் பார்ப்பான் என்பதற்கே ஆதாரங்கள் உள்ளன.
பௌத்த மார்க்கத்திலிருந்து வேறுபட்ட தியானமார்க்கத்தைத்தான் போதிதர்மன் சீனாவில் போதித் துள்ளான். சீனாவில் சான் மதமாகவும், ஜப்பானில் ஜென் மதமாகவும் மக்களால் கடைபிடிக்கப்படுகிறது. இவை இந்து மதத்தைக் கட்டி எழுப்பிய சங்கரரின் அத்வைதக் கோட்பாடுகளுக்கு நெருக்கமாக உள்ளன. ஜப்பானிலும் இந்தியாவில் உள்ளது போன்ற ஒரு ஏற்றத்தாழ்வு நிலை, சாதி போன்ற ஒரு ஒடுக்குமுறை வடிவம் சில பகுதிகளில் இன்றும் உள்ளன.
ஆக புத்த மதத்தை ஒழிக்க சில பார்ப்பனர்கள் அந்த மதத்துக்குள்ளேயே புகுந்து அது பரவிய இடங்கள் எல்லாவற்றிற்கும் தாங்களும் பரவி அழித்துள்ளார்கள். ‘பகையாளி குடியை உறவாடிக் கெடு’ என்று கிராமங்களில் சொல்வார்கள். அப்படி ஒரு வேலையைப்பார்த்த நயவஞ்சகனை கதாநாயகனாக உலவ விட்டுள்ளார் முருகதாஸ்.
தன் பெயரில் உள்ள A.R என்ற இரு ஆங்கில எழுத்துக்களைக்கூட எடுக்க முடியாத முருதாஸ், தமிழுக்காக நீட்டி முழங்குவது நல்ல காமெடி. இலங்கையில் 7 ஆம் அறிவு படத்தை திரையிட வேண்டு மென்றால் இலங்கையைக் குறிக்கும் சில வசனங்களை நீக்க வேண்டும் என்று அந்த அரசு நிபந்தனை விதித்தது. இந்தப் படத்தில் ஒரே ஒரு நல்ல விசயம் என்று பலரும் குறிப்பிட்ட அந்த வசனங்களை நீக்கி விட்டுத்தான் இலங்கையில் 7 ஆம் அறிவு வெளியாகி உள்ளது. ஆனால் அப்பாவி ஐரோப்பியத் தமிழர்களிடமும் தமிழ்நாட்டுத் தமிழர்களிடமும் கல்லா கட்டுவதற்கு திருப்பி அடி என்பது போன்ற வசனங்கள். திருப்பி அடி என்று என்று சொல்பவர்கள் எல்லோருமே இப்படித்தானோ? இடஒதுக்கீடே இல்லாத ஐ.ஐ.டி யில் நின்று கொண்டு ‘இடஒதுக்கீட்டால்தான் நாடு கெட்டுவிட்டது’ என்று வசனம் பேசியதற்காக அந்த வசனத்தை நீக்கினால்தான் இங்கு அந்தப் படம் ஓடும் என்று ஒரு கலகக்குரல் எழுப்ப யாரும் தயாராக இல்லை.
எனக்கு மதப்பற்றோ, மொழிப்பற்றோ, இனப்பற்றோ சிறிதும் இல்லை என்றவர் பெரியார். மதமாற்றம், மொழி மாற்றம், இனமாற்றம் அனைத்தும் தவறு என்கிறது இப்படம். தமிழ்தேசியத்திற்கும், இந்து தேசியத்திற்கும் உள்ள ஒற்றுமை இது தான். அதனால்தான் அத்வானி இராமேசுவரம் மீனவர்களைப் பற்றியும். ஈழத்தமிழர்களைப் பற்றியும்கூட பேச முடிகிறது. பரமக்குடியைப் பற்றி இரு தரப்புமே பேச முடிவதில்லை. இந்து மக்கள் கட்சியும், இந்து முன்னணியும், பாட்டாளி மக்கள் கட்சியும் காதலர் தினத்தை எதிர்க்க முடிகிறது. அகநானூற்றுக் களவியல் பண்பாட்டின் நீட்சிதான் காதலர் தினங்கள் என்று தமிழர்களின் பழம்பெருமையை மீட்கக்கூட ஒரு தமிழ்தேசிய அமைப்பும் வரமுடியவில்லை.
வீட்டுக்கு முன்பு மாட்டுச்சாணியால் வாசல் தெளித்து, கோலம் போட்டு, தலைவாசலின் நிலைக் கதவின் கீழே மஞ்சளும் குங்குமமும் வைத்து, வீட்டுக்குப் பின்னே துளசிச்செடியும் இருப்பது யாருடைய வீட்டில்? பார்ப்பனர்களுடைய வீட்டில் தான் இவை தவறாமல் நடக்கும். அந்த பார்ப்பன வாழ்வியலைத் தான் தமிழர்களுக்கு முன்மாதிரியாக, கடைபிடிக்க வேண்டிய கடமையாக முழுங்குகிறார் முருகதாஸ். இதைத் தான் இந்துமுன்னணிக்காரன் பேசுறான், சங்கராச்சாரி பேசுறான். இந்த சாணி, மஞ்சள், துளசி கதைகளை பக்தியாகச் சொல்லக் கூடாதாம்! அறிவியலாகச் சொல்ல வேண்டுமாம்! அந்தப் பித்தலாட்ட அறிவியலைத்தானே ஜக்கி வாசுதேவும், வேதாத்திரி மகரிஷியும், ரவிசங்கரும், நித்தியானந்தாவும் அவரவர் ஸ்டைலில் ஹைடெக்காக சொல்லி பல தலைமுறைகளுக்குச் சொத்து சேர்த்துள்ளார்கள்?
சாணியில் கூட பசுமாட்டுச்சாணி, எருமை மாட்டுச்சாணி என்று பிரிவினையை வைத்திருக்கும் சமுதாயத்தில், எந்தப் பார்ப்பானும் மறந்தும்கூட ஒரு எருமை மாட்டை வளர்க்காத நாட்டில், எந்தப் பார்ப்பன அக்ரகாரத்திலும் வாசலில் தவறிப்போய்கூட எருமைச்சாணியைப் பயன்படுத்தாத சூழலில் எங்களுக்குச் சாணி என்றால் சாணிப்பாலும் சவுக்கடியும் தான் நினைவுக்கு வருமே ஒழிய, அதை மருந்தாகப் பார்க்க முடியாது. இப்பத்தான் இந்தத் தலைமுறைதான் சாணியையும் மாட்டையும் ஒதுக்கிவிட்டு கம்ப்யூட்டரையும், கல்லூரிகளையும் பார்க்கிறோம். இன்றும் எங்கள் அப்பன், பாட்டன் வீடுகளில், வீட்டுக்கு முன்புறம் மட்டுமல்ல, வீடு முழுவதற்குமே சாணித்தரைதான். அதுவும் வாரம் ஒரு முறை ஃப்ரெஷ் சாணி. எந்த நோயையும் அந்த சாணித்தரை தடுக்கவில்லை. இப்பத்தாண்டா மொசைக் தரையவே பாக்குறோம். அது ஒங்களுக்குப் பிடிக்கலயா? நீங்க மட்டும் ஐ.ஐ.டி யில ப்ராஜெக்ட் எழுதி அமெரிக்காவுக்கும், சீனாக்கரனுக்கும் அனுப்புவீங்க, நாங்க சாணியிலயும், சகதியிலயும் சாகனுமா?
‘வாசல் தெளித்து, கோலம்கூட போட மாட்டிக்கிறா’ என்று சராசரி ஆண்களால் குற்றம் சாட்டப்பட்டு, பல பெண்களின் வாழ்க்கை விவாகரத்து வரை போய்க்கொண்டு இருக்கிறது. கோலம்கூட போடத் தெரியாதா? என்ற கேள்வி இன்றும் பல பெண்களுக்கு சங்கடத்தை உருவாக்கியே வருகிறது. இது ஒரு இந்து உளவியல். இந்து வாழ்வியல். தட்டுத்தடுமாறி ஒடுக்கப்பட்ட சமுதாயம் மேலே வந்துகொண்டிருக்கிறது. கம்ப்யூட்டர் நிறுவனங்களில் பணிபுரியத் தொடங்கியிருக்கிறது. வெளிநாடுகளுக்குப் போய்வரத் தொடங்கியிருக்கிறது. அதைப் பொறுக்க முடியாத பார்ப்பனக்கூட்டம் வெளிநாட்டுக்கு வேலைப் போகலாமா? இந்தியாவைக் காப்பது யார்? பன்னாட்டு நிறுவனங்களில் வேலை செய்யலாமா? இது முதலாளித்துவ ஆதரவு இல்லையா? ஐ.ஐ.டி யில் இடஓதுக்கீடு வைக்கலாமா? இதனால் தகுதி திறமை பாழாகாதா? எல்லோரும் கம்ப்யூட்டர் தொழிலுக்கு வந்துவிட்டால் நமக்கு உணவழிப்பது யார்? நாம் விவசாயத்தைப் பார்ப்போம், அதுவும் (சாதியிலிருந்து மீடேறவே முடியாத) இயற்கை விவசாயம் பார்ப்போம் என்றெல்லாம் போதனைகளைத் தொடங்கியிருக்கிறது. அதன் தொடர்ச்சிதான் இந்த துளசி, சாணி, மஞ்சள், கோலப் பிரச்சாரங்கள்.
தமிழனே அல்லாத, தமிழர்களுக்கு - திராவிடர்களுக்கு எதிரியான ஒருவனைக் காட்டி தமிழர்களுக்கு - திராவிடர்களுக்கு எதிரான ஆரியப் பண்பாட்டைத் திணிக்கும் முயற்சியே 7 ஆம் அறிவு.
பழந்தமிழர் பெருமை குறித்த தோழர் பெரியாரின் விளக்கம் இதோ,
பழந்தமிழன் யார்? அவன் கொள்கை என்ன? அதற்கு ஆதாரம் என்ன? அதற்கு இன்று அவசியம் என்ன? - என்பது போன்ற கேள்விக்குப் பதில் சொல்ல இன்று ஆளைக் காணோம். வீணாக, அந்தப் பேரில் பிழைக்கவோ, பெருமைப்படவோ, மக்களைச் சுரண்டவோ தங்கள் எண்ணத்திற்கு பயன்படுத்திக் கொள்ளவோ பயன்படுத்தப்படுகிறது.
பழந்தமிழன் யாராயிருந்தால் எனக்கென்ன? உங்களுக்குத் தான் என்ன காரியமாகும்? அவன் கொள்கையோ, மதமோ, கடவுளோ, நடப்போ, சக்தியோ எதுவாயிருந்தால் தான் இங்கு இன்று நமக்கு என்ன லாபம் ? என்பது தான் எனது கேள்வி.
பழந்தமிழர் நிலையைப் பற்றிப் பேசுபவர்கள் பகுத்தறிவுக்கு மதிப்புக் கொடுக்கும் அறிவாளிகளானால், நடுநிலைக் காரர்களானால், அவர்களை ஒன்று கேட்கிறேன். அதாவது காட்டுமிராண்டி வாழ்க்கைக் கால மனிதனை விட கல்லாயுத கால வாழ்க்கை மனிதன் சிறந்தவன் அல்லவா என்பதும், அது போலவே 4000, 5000 வருடத்திற்கு முன் இருந்த மனிதனை விட இன்று இருபதாவது நூற்றாண்டில் வாழும் மனிதன் சிறிதாவது மேலான அனுபவம் பெற சவுகரியமும், ஆராய்ந்து பார்க்கும் வசதியும் உடையவனா? அல்லவா? என்பதோடு அந்தக் காலத்தில் வாழ்ந்த வாழ்வை விட, எண்ணிய எண்ணத்தை விட வேறான வாழ்வும், வேறான எண்ணங்களும் கொள்ள வேண்டியவனாய் இருக்கின்றானா இல்லையா என்பதேயாகும்.
இன்று வாழும் மனிதனுடைய எந்தக் காரியத்திற்கு பழந் தமிழனுடைய வாழ்க்கைக் குறிப்பும் நினைவுக் குறிப்பும் நமக்கு வேண்டியிருக்கிறது என்று உங்களை வணக்கமாய்க் கேட்கிறேன்.
வீணாக பழந்தமிழர் கொள்கை என்பதும் பழந்தமிழர் வாழ்க்கை நிலை என்பதும் அந்நியன் ஏய்க்கவோ, அறியாமையில் மூழ்கவோ தான் பயன்படுத்தக் கூடியதாக ஆகி விட்டது.
இனி நம்முடைய எந்த சீர்திருத்தத்திற்கும் அந்தப் பேச்சு வராமல் பார்த்துக் கொள்ள வேண்டியது பகுத்தறிவுவாதியின் கடமையாக ஆகி விட்டது. பழந்தமிழன் வந்து போதிக்கத் தகுந்த நிலையில் இன்று நமது மனித சமூகம் இல்லை.
பழந்தமிழன் கொள்கை எதுவும் இன்று எந்த மனித சமூகத்திற்கும் அவசியமும் இல்லை. மனிதன் காலத்தோடு, மாறுதலோடு, செல்ல வேண்டிய வனே யொழிய வேறில்லை. வேண்டுமானால் மடையர்களைத் தட்டி எழுப்ப ஆயுதமாக அதைக் கொள்ளலாம். ஆனால் சாதுமக்களை ஏமாற்ற அதைப் பயன்படுத்த விடக் கூடாது’’
‘வாழ்க்கைத் துணை நலம்’ என்ற நூலில் 6,7 ஆம் பக்கங்கள்
19 comments:
அருமையான பதிவு தோழர் ! அய்யா கேட்டது போல் பழந்தமிழன் எவ்வளவு பெரிய அப்பாடக்கராய் இருந்தாலும் நமக்கு தம்படிக்கு பயனில்லை ! இவனுங்க சிலிர்ப்புதான் தாங்கலை
//எனக்கு மதப்பற்றோ, மொழிப்பற்றோ, இனப்பற்றோ சிறிதும் இல்லை என்றவர் பெரியார்.//
இந்த பெரியார் வாக்கியத்தை அவர் சொன்னவாறே பதிய முடியமா?
மிகவும் உதவியாய் இருக்கும். நன்றி.
நான் திரைப்படம் பார்ப்பதை முழுமையாக தவிர்த்துவிட்டேன்.
6 அறிவுதானே உண்டு 7 ஆம் அறிவு என்று சொல்லுகிறார்களே என்று எண்ணியதுண்டு.
உங்களின் விமர்சனக்கட்டுரையைப் படித்த போதுதான் தெரிந்தது துடப்பக்கட்டைக்கு பட்டுக் குஞ்சம் கட்டியிருக்கிறார்கள் என்று.
கிடைத்துவிட்டது :)
எனக்கு மட்டும் இத்துணிவு எப்படி வந்தது என்றால் – கடவுள், மதம், சாஸ்திரம், முன்னோர், மொழி, இலக்கியம், நாடு என்கின்ற எந்தப் பற்றும் எனக்கு இல்லை. http://www.keetru.com/dalithmurasu/apr09/periyar.php
என்னை பெற்ற பெற்றோர்களை மதிக்கமாட்டேன், என் முன்னோர்கள் சொன்னதை நான் கேட்க மாட்டேன் அவர்கள் மூடர்கள், அவர்கள் சொல்வது எனக்கு எதுவும் வேணாம், எனக்கு என்று எந்த அடையாளமும் வேணாம், என் பரம்பரை எதுவும் என்னை பின் தொடர வேணாம், இப்போதைக்கு நான் பிழைத்தால் போதும் வேற எதை பற்றியும் எனக்கு கவலை இல்லை என்று வாழ்ந்தால் வாழுங்களேன், யாருக்கு கவலை?
ஒன்றை மட்டும் சொல்கிறேன் வரலாறு, முன்னோர்களின் அனுபவம் இல்லை என்றால் நீங்கள் (இனம்) இருக்கும் இடமே தெரியாது....
போதி தர்மன் பற்றி என் மலேசியா சீன நண்பனிடம் கேட்டேன். அவன் போதி தர்மன் , இந்தியாவிலிருந்து வந்தவர் என்றான். அதைதான் நானும் இங்கு சொல்ல வருகிறேன். தமிழனா, தெலுங்கனா, பஞ்சாபியா, வங்காளிய என்பது எனக்கு முக்கியம் இல்லை. போதி தர்மன் பாரத தேசத்தை சேர்ந்த ஒரு துறவி. அவ்வளவுதான். பிரச்சனை முடிந்தது.
எங்களுக்கு இன்னும் இந்த கதையை படித்து வருத்தமாக உள்ளது. அதனால் எங்களை பற்றி ஏதாவது சொல்ல.
நாம் "வந்தோம் "................ நாம்" சாப்பிட்டோம் "............... நாம் "சென்றோம்"
அருமையான பதிவு தோழர் , முக்கியமாக சாணி மெழுகிய வீடுகளிலும் , தொளுவங்களை
ஒட்டிய வீடுகளிலும் இருந்த நம் மக்கள் ருமாடிக் காய்ச்சலால் அவதிப்பட்டு வருகின்றனர், அவர்களுக்கு தேவை நல்ல வீடுகள் , அடுக்கும் ஆப்பு வைக்க பார்க்கின்றனர்
ragupathy
பல்லவர்கள் தமிழர் என்பதை உங்களால் மெய்பிக்கமுடியுமா?.பகுத்தறிவு பகலவன் பெரியார் சொன்னாலும் அது தவறுதான்.எந்தவொரு இனமும் தன் கடந்தகால வரலாற்றை அறியாமலும் பெருமைப்படாமலும் முன்னேறியதாக சரித்திரம் இல்லை.
எந்தவொரு இனமும் தன் வரலாறை அறிந்துகொள்ளாமல் முன்னேற முடியாது.வரலாறுகளை திரித்து கூறுவதோ மறைக்க முற்படுவதோ அல்லது மறுக்க,மறைக்க சொல்வதோ முட்டாள்தனம்.இதை பகுத்தறிவு பகலவன் பெரியார் சொன்னாலும் தவறுதான்.பல்லவர்கள் தமிழர் இல்லை என்று உங்களால் மெய்பிக்க முடியுமா?
ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி ! எங்காவது ஏதாவது பிரச்சனை என்றால் பிராமணனை தாக்க வேண்டியது ! 1498 இல் ஐரோப்பியர்கள் இந்தியாவில் காலடி வைக்குமுன் ஆர்யர் திராவிடர் என்ற கருத்தே நம் நாட்டினருக்கு தெரியாது! இப்படி கதை கட்டி விட்டதே நாங்கள் தான் என்று ஐரோப்பியர்களே ஒத்துக்கொள்ளும் வரலாற்று காலத்தில் நீங்கள் இன்னும் ஆர்யர் திராவிடர் கொள்கைகளில் இருந்து வெளியே வர வில்லை என்று தெரிகிறது ! சைவ திருமுறை எழுதிய நாயன்மார்களில் எத்தனை பேர் பிராமணர்கள் ? அவர்களெல்லாம் படிக்க வில்லையா ? அறிவை வளர்த்துகொள்ளவில்லையா ? போதி தர்மன் என்ற சொல் வட மொழிச்சொல் என்று நீங்கள் சொல்வதை பார்த்தால் தஞ்சையை ஆண்ட அருண்மொழி வர்மன் என்ற இராஜ இராஜ சோழனே தமிழன் இல்லையே ! அய்யா! திருவள்ளுவரின் முதற் குறளிலேயே வட மொழி இருக்கிறது ' அகர முதல எழுத்தெல்லாம் ஆதி பகவன் முதற்றே உலகு ', இதில் 'ஆதி, பகவன் , உலகு ' போன்றவை தூய தமிழ் சொற்களோ ? உங்கள் பரம்பரையில் யாரும் படிக்க வில்லை என்றால் எல்லோரும் அப்படியா ? நூறு ஆண்டுகளுக்கு முன்பே அம்பேத்கர் பாரிஸ்டர் பட்டம் வாங்க வில்லையா?
// 1498 இல் ஐரோப்பியர்கள் இந்தியாவில் காலடி வைக்குமுன் ஆர்யர் திராவிடர் என்ற கருத்தே நம் நாட்டினருக்கு தெரியாது! இப்படி கதை கட்டி விட்டதே நாங்கள் தான் என்று ஐரோப்பியர்களே ஒத்துக்கொள்ளும் வரலாற்று காலத்தில் நீங்கள் இன்னும் ஆர்யர் திராவிடர் கொள்கைகளில் இருந்து வெளியே வர வில்லை என்று தெரிகிறது !//
கி.பி.470 லேயே களப்பிரர்கள் காலத்திலேயே திராவிடர் சங்கம் இருந்திருக்கிறது. சதாசிவப்பண்டாரத்தார் அல்லது உங்கள் இனத்து நீலகண்டசாஸ்த்திரியின் வரலாற்று நூல்களைப் படிக்கவும்
தஞ்சையை ஆண்ட அருண்மொழி வர்மன் என்ற இராஜ இராஜ சோழனே தமிழன் இல்லையே !
தமிழ் மன்னர்கள் சமஸ்கிருத வட மொழிப்பெயர்களை சூடிக்கொள்ளும் வழக்கம் 4 ஆம் 5 ஆம் நூற்றாண்டுகளில் இல்லை என்றுதான் எழுதியுள்ளேன். பிற்காலச் சோழர்கள் என்னும் பார்ப்பன அடிமைகளின் காலத்தில் பெயர் என்ன ஒட்டுமொத்த தமிழர் அடையாளங்களையும் பார்ப்பானிடம் பறிகொடுத்தவர்கள்தான் தமிழ் மன்னர்கள். அதற்கு நல்ல எடுத்துக்காட்டு இராஜராஜன். மேலும் இராஜராஜன் உண்மையாகவே வரலாற்று ஆதாரங்களின்படி தமிழன் அல்ல. கீழ்உள்ள இணைப்பை படிக்கவும் http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=12577&Itemid=139
cinima padam athil oru sila sinthanai irukkum, comedy irukkum, varalaru irukkum, aanaal athu 2 mani neram, 3 mani neram, makkal ithai perithaga mathippathillai. neengal yean itharkku kan vaithu, kaathu vaithu, oothi peria thavaru nadanthu vittathaga solringa. ithelaam neengale padaththai 100 naal otta podura thittam.
http://en.wikipedia.org/wiki/Bodhidharma
Bodhidharma (Tamil: போதிதர்மன்) was a Buddhist monk who lived during the 5th/6th century and is traditionally credited as the leading patriarch and transmitter of Zen (Chinese: Chán, Sanskrit: Dhyāna) to China. He was the third son of a Tamil king Gandha Varma Pallava IV of the Pallava Dynasty [1][2]. According to Chinese legend, he also began the physical training of the Shaolin monks that led to the creation of Shaolinquan. However, martial arts historians have shown this legend stems from a 17th century qigong manual known as the Yijin Jing.
Little contemporary biographical information on Bodhidharma is extant, and subsequent accounts became layered with legend, but some accounts state that he was from a Brahmin family in southern India and possibly of royal lineage. However Broughton (1999:2) notes that Bodhidharma's royal pedigree implies that he was of the Kshatriya warrior caste. Mahajan (1972:705–707) argued that the Pallava dynasty was a Tamilian dynasty and Zvelebil (1987) proposed that Bodhidharma was born a prince of the Pallava dynasty in their capital of Kanchipuram[3] Scholars have concluded his place of birth to be Kanchipuram in Tamil Nadu, India.[1][4][5][6][7][8][9][10]
After becoming a Buddhist monk, Bodhidharma traveled to China. The accounts differ on the date of his arrival, with one early account claiming that he arrived during the Liú Sòng Dynasty (420–479) and later accounts dating his arrival to the Liáng Dynasty (502–557). Bodhidharma was primarily active in the lands of the Northern Wèi Dynasty (386–534). Modern scholarship dates him to about the early 5th century.[11]
The Anthology of the Patriarchal Hall (952) identifies Bodhidharma as the 28th Patriarch of Buddhism in an uninterrupted line that extends all the way back to the Buddha himself. D.T. Suzuki contends that Chán's growth in popularity during the 7th and 8th centuries attracted criticism that it had "no authorized records of its direct transmission from the founder of Buddhism" and that Chán historians made Bodhidharma the 28th patriarch of Buddhism in response to such attacks.[12]
யரோ எழுதிவைத்த வரலாற்று உதாரணங்களை முன்வைத்து எழுதப்பட்டுள்ள அரைவேக்காட்டுத்தனமான கட்டுரை. தமிழகம் என்பது சித்தர்கள் நாடு. இயற்கையை தெய்வமாக போற்றிய மண்.வாழ்க்கை அசைவின் ஒவ்வொன்றிலும் அறிவியலும் ஆன்மிகமும் நிறைந்தது.இதனை முழுமையாக அறிந்துகொள்ளாமல் பெரியாரியம் என்ற பெயரில் சிலர் அடிக்கும் லூட்டிகளைத் தாங்க முடியவில்லை. பெண்ணுரிமை, மூடநம்பிக்கைக்கு எதிரான நடவடிக்கைகள் பெரியாரின் சாதனைகள். ஒப்புக்கொள்ளவேண்டியவை. அதைத் தாண்டி பெரியாரிடம் நிறைய தவறூகள் உள்ளன. கடவுள் மறுப்பு என்ற பெயரால், தமிழரின் பாரம்பர்ய ஆன்ம வாழ்வை அரைவேக்காடுகள் விமர்சிக்கும் பாதையை வகுத்தவர் பெரியார். போதி தர்மன் தமிழன் இல்லை என்றால். தமிழனுக்கு என்ன அடையாளம் ?
what is history, your current life should be a history for your childrens in future, you know that there is no smoke without fire.In the world every things has two dimension, we can,t live with one dimension.
Example we can,t live with day only we need night also.pls think where we are and where we go
Every body seeing manhood in their own zonal, man is the child of nature and we have a story that manhood from adam and eval. so they are grandfather and grandmother for me and you and others,and what is the relation ship with you and your wife both from adam and eval.you know cow gave the milk, it is for human being, there is any different tamilan, north indian, kerla and hindu,muslim and christian, cow is give the milk for all. there is no difference as like tamilcow,english cow, muslim, periyar and hindu, christian cow.
உங்க கட்டுரை நல்ல இருந்துச்சு, படத்த தயாரிச்ச பட அதிபதிகல பத்தி ௧ வார்த்த கூட சொல்லவே இல்லையே........ ஆனா ஊன பர்பன்னர்கல ஈளுதிடுவிங்க , மத்த ஜாதிகாரன்ல ரொம்ப நல்லவன் சொல்லுறிங்களா... ok AR பத்தி சொன்னிங்களே ஏன் Red Giant பத்தி சொல்லல. இது தான் தமிழன்
Post a Comment